காவிரி தண்ணி எல்லாம் கிடையாது வேண்டுமென்றால் கடல் நீரைக் குடியுங்கள்; சுப்பிரமணியன் சாமியின் திமிர் பேச்சு...
உச்ச நீதிமன்றம் கெடு விதித்தும் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை. மேலும், 3 மாத கால அவகாசம் கேட்டு இன்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. அதேநேரம், தமிழக அரசு மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து மாணவ அமைப்பினர், விவசாயிகள், அரசியல் கட்சித் தலைவர்கள் என பலர் போராட்டம் நடத்தி வரும் வேளையில் பாஜக பிரமுகர் சுப்பிரமணியன் சாமி தமிழர்களை உதாசினப்படுத்தும் வகையில் ஒரு கருத்தை தெரிவித்துள்ளார்
தமிழக மக்களுக்கு குடிக்கவும் பயன்படுத்தவும் தண்ணீர் வேண்டுமென்றால் கடல் நீரை தூய்மை செய்து பயன்படுத்த ஏற்பாடு செய்கிறேன். அதைவிட்டுவிட்டு உங்களுக்கு காவிரி தான் வேண்டுமென்றால் அழுது புலம்பிக்கொண்டே இருங்கள் என்று கிண்டல் செய்துள்ளார். தமிழக மக்கள் இவரது கருத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Top Seithigal

Comments
Post a Comment