பாமகவின் பொது வேலை நிறுத்தத்திற்கு நாம் தமிழர் கட்சி ஆதரவு - சீமான்.



                          பாமகவின் பொது வேலை நிறுத்த அறிவிப்பிற்கு நாம் தமிழர் கட்சி ஆதரவு - சீமான்.

உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தப் பிறகும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் துரோகமிழைத்தும், திட்டமிட்டு கர்நாடகத் தேர்தலுக்காகக் கள்ளமௌனம் சாதித்து வரும் மத்திய அரசைக் கண்டித்தும், உடனடியாக அமைக்க வலியுறுத்தியும் வரும் 11 ஆம் தேதி பாட்டாளி மக்கள் கட்சி தலைமையிலான காவிரி உரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பு அழைப்புவிடுத்திருக்கும் பொது வேலைநிறுத்தத்தில் நாம் தமிழர் கட்சி முழுமையாகப் பங்கேற்கிறது.

நாம் தமிழர் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளும் இந்தப் பொது வேலைநிறுத்தத்தில் பங்குபெற வேண்டும் என்று உரிமையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

காவிரி நமது உரிமை. உரிமையைப் பெறும் வரை தொடர்ந்து போராடுவோம். தமிழர்கள் இணைந்து போராடுவோம்.

இவ்வாறு சீமான் கூறியுள்ளார்

Top Seithigal

Comments

Post a Comment