பாலில், தண்ணீர் கலக்கப்பட்டுள்ளதா என அறிய, தரையில் கொஞ்சம் பாலை ஓட விடுங்கள். அது ஓடிய இடத்தில், தடம் இல்லையென்றால், பாலில் தண்ணீர் கலக்கப்பட்டுள்ளது எனவும், வெள்ளையாக தடம் தெரிந்தால், சுத்தமான பால் எனவும் தெரிந்து கொள்ளலாம்.
மைதாவில் மரவள்ளிக்கிழங்கு மாவு கலப்படம் செய்யப்படுகிறது. மைதா மாவை பிசையும் போது, அதிக தண்ணீர் தேவைப்பட்டால், அதில் கலப்படம் உள்ளது உறுதியாகிறது.
தேயிலையில் உளுந்துத்தோல் அல்லது கடலை பருப்புத்தோல் சேர்க்கப்படுவதுண்டு. தண்ணீரில் நனைக்கப்பட்ட வடிகட்டியில் சிறிது தேயிலையை துாவி, அதன் நிறம் பிரியாமல் இருந்தால், சுத்தமான தேயிலை என்றும், நிறம் மாறினால், கலப்பட தேயிலை என்றும் கண்டுபிடிக்கலாம்.
தேனில் சர்க்கரைப்பாகு கலப்படம் செய்கின்றனர். தேன் துளியை தாளில் இட்டால், சுத்தமான தேன், தாளில் அப்படியே இருக்கும்; சர்க்கரை கலப்பு இருந்தால், தாள் ஊறி விடும். தற்போது அரிசியில் ‘பிளாஸ்டிக்’அரிசி கலப்பது, போலி முட்டைகள் ஆகியவை வேதனை அளிப்பதாக உள்ளது. கால மாற்றத்துக்கு ஏற்ப, கலப்படப் பொருள்தான் மாறுகிறதே தவிர, கலப்பட கலாசாம் மாறவில்லை என்பது நிதர்சனமான உண்மை.
Top Seithigal
Comments
Post a Comment