சென்னை: எதிர்க்கட்சி தலைவரும் திமுக செயல்வதலைவருமான மு. க.ஸ்டாலினின் வீட்டில் வெடிகுண்டு வீசுவோம் என்று மிரட்டல் விடுக்கப்பட்டதாக காவல் துறை கட்டுப்பாட்டு அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ளது மு.க.ஸ்டாலினின் வீடு. இந்நிலையில் இன்று காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு மர்மநபர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது அவர் காஞ்சிபுரத்திலிருந்து தான் பேசுவதாக தெரிவித்தார். பின்னர் ஸ்டாலின் வீட்டில் வெடிகுண்டை வீசப்போவதாக தெரிவித்த அவர் இணைப்பை துண்டித்தார்.
இதனால் ஸ்டாலினின் வீட்டுக்கு கூடுதல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அந்த நபரை கைது செய்து விசாரிக்க போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். காவிரி விவகாரத்துக்கு எதிராக ஸ்டாலின் போராடி வருவது குறிப்பிடத்தக்கது.
Top Seithigal
Comments
Post a Comment