காவிரி பிரச்சனையில் எங்களுக்கு என்ன தண்டனை கிடைத்தாலும் கவலையில்லை.. ஸ்டாலின் ஆவேசம்



                            காவிரி பிரச்சனையில் எங்களுக்கு என்ன தண்டனை கிடைத்தாலும் கவலையில்லை என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருச்சி மும்கொம்பிலிருந்து கடலூர் நோக்கி காவிரி மீட்பு பேரணியை ஸ்டாலின் இன்று துவங்குகிறார். இதனை முன்னிட்டு திருச்சி புறப்பட்ட அவர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.

                               அப்போது காவிரிக்காக நடைபெறும் மீட்பு பயணம் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்றும் இரு குழுக்களாக பயணத்தை தொடர்கிறோம் என்றும் கூறினார். கடலூரில் மிகப்பெரிய பொதுக்கூட்டம் நடைபெறும் என்றும் அதன்பின் சென்னை வந்து ஆளுநரை சந்திப்போம் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.

                                பிரதமர் யாரையும் சந்திக்க தயாராக இல்லை என்ற அவர் காவிரி விவகாரத்தில் பிரதமர் எங்களை சந்திக்க மாட்டார் என்பதால் கறுப்புக்கொடி காட்டுகிறோம் என்றார். காவிரிக்காக என் மீது போடப்பட்டுள்ள வழக்கை மனமார ஏற்றுக்கொள்ள தயார் என்ற ஸ்டாலின், காவிரி பிரச்னையில் எங்களுக்கு என்ன தண்டனை கிடைத்தாலும் அதைப்பற்றி கவலையில்லை என்றும் ஸ்டாலின் கூறினார்.

Top Seithigal

Comments