நீ அளந்து விடு, என்னிடம் ஆதாரம் இருக்கு: சீமான் குறித்து சீறிய வைகோ.




                                 நியூட்ரினோ திட்டத்தின் ஆபத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதற்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவு திரட்டவும் ம.தி.மு.க தலைவர் வைகோ நடைபயணம் மேற்கொண்டுள்ளார் . சமீப காலமாக வைகோவிற்கும் சீமானுக்கும் இடையே பனிப்போர் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் ஒரு கூட்டத்தில் வைகோ பேசியபோது நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்களுக்கும் மதிமுகவினருக்கும் கைகலப்பு ஏற்பட்டது. இதன் விளைவாக வெள்ளிக்கிழமை நடை பயணத்தின்பொழுது பேசிய வைகோ  சீமானை நேரடியாக தாக்கிப்பேசினார்

அவர் பேசியது

சமீபத்தில் ஜெனிவாவிற்கு நான் சென்று தனி ஈழம் அமைக்க வேண்டும் என்று ஐநாவில் பேசினேன். அப்பொழுது அவர்கள் சொன்னார்கள், ஆயுதப்போர் முடிவுக்கு  வந்து விட்டது  என்று . அதற்கு  நான் சொன்னேன், பொதுவாக்கெடுப்பு  நடத்தி  தனி ஈழம்  அமைக்கவேண்டும் என்று. நான் இரண்டு நாட்கள் இனப்படுகொலை பற்றி பேசினேன்

இலங்கை அரசுதான் கொன்றது சர்வதேச விசாரணை வேண்டும்  என்று.  நான் பேசி முடித்துவிட்டு வெளியே வந்தபொழுது  இலங்கையை சேர்ந்த ஒரு எட்டு நபர்கள் என்னை இராணுவத்தில், கடற்படையில் என  அனைவரையும் கொன்று குவித்த கிருமிகளை அனுப்பியுள்ளது இலங்கை அரசு. அதிலிருந்து  ஒரு பெண்மணி வந்துகேட்டார், எங்கள் நாட்டைப் பற்றி பேச நீ யார் என்று ஆங்கிலத்தில் கேட்டார். நீ ஒரு கொலைகாரன், எல்.டி.டி என்றார். நான் பயப்படவில்லை என் தாய், தந்தையின் இரத்தத்தில் வீரம் இருக்கிறது. அது எனக்கும் இருக்கிறது. நான் கூறினேன்,

நீங்கள் இரத்தவெறி பிடித்த பிசாசுகள் என்று. நான் பேசியதை மட்டும் அவர்களின் போனில் வீடியோ எடுத்துக் கொண்டனர். அதைக் காட்டினால், நான் பிரச்சனை செய்தேன் என்று ஐ.நா சபை என்னை வெளியே அனுப்பிவிடுவார்கள். ஆனால் இந்த சம்பவத்தைப் பார்த்து அங்கு வந்த ஐ.நா அதிகாரிகள், அவர்களிடமிருந்து போனை பிடுங்கி விட்டனர். 

வெளியே வந்து நான் பேட்டிகொடுத்தேன். என்  பக்கத்தில் இயக்குனர் கௌதமன் நின்றார். அடுத்த நாளிலிருந்து எனக்கு இரண்டு பாதுகாப்பு அதிகாரிகளை நியமித்தது ஐ.நா. நான் அதை எதிர்பார்க்கவில்லை. எந்த இடத்திலும் தமிழனையும், தமிழ்நாட்டையும் விட்டுக்கொடுக்காதவன் நான்.


ஆனால், இங்கு ஒருவர் என்னவென்றால் பெரியாரை திட்டுகிறார், பெரியார் தமிழன் இல்லை என்று கூறினார். பெரியார் இல்லை என்றால் நாமெல்லாம் யாரு? நம் பிள்ளைகள் எல்லாம் ஐ.பி.எஸ், ஐ.ஏ.எஸ், நீதிபதி, அதிகாரிகள் என்று ஆவதற்கு பெரியார்தானே காரணம்? அவரைத் திட்டினாய், அடுத்து என்னை தமிழர் இல்லை என்றாய். விடுதலைப் புலிகளின் பெயரை  வைத்துக்கொண்டு எச்சை பிழைப்பு பிழைத்துக் கொண்டு, உலகம் முழுவதும் காசை வாங்கிக் கொண்டு என்னிடம் ஆயிரம் ஆதாரம் இருக்கு என்கிறாய் எடுத்து விடு என் தம்பிகள் என்ன செய்வார்கள் என்று தெரியாது என்று சீமான் நேற்று ஒரு பேட்டியில் கூறியுள்ளார். உன் தம்பிகளை வெட்டச் சொல்லு, சுடச் சொல்லு.


பாரிஸ் நகரில் விடுதலைப்புலிகள் தளபதி கர்னல் பரிதியை கொலை செய்த இரண்டு துரோகிகளை  உன்னுடன் வைத்துள்ளாய் என்பது எனக்குத் தெரியும். பாரிஸில் இரண்டு மாதங்களுக்கு முன்பு நான் சென்று பார்த்து வந்தேன். அதன் பிறகு இரண்டுமாதம் கழித்து அவர் மாடியிலிருந்து இறங்கி வரும்பொழுது இலங்கையை சேர்ந்த இருவர், கூலிப்படையை சேர்ந்தவர்கள் பரிதியைக் கொன்றார்கள். அவர்களின் புகைப்படம் உள்ளது என்னிடம்.

நான் இவ்வளவு நாளாக அதை பற்றிப் பேசவில்லை. சீமான் சொல்கிறார் லட்சம்பேர் வைகோவிற்காக உயிரை கொடுப்பார்கள் என்று சொல்கிறாரே, அவர் நடைப்பயணத்தில் ஐம்பது நபர்கள்தான் செல்கிறார்கள் என்று. என் கட்சிக்காரர்களும், மாவட்ட செயலாளர்களும் வசதியானவர்கள் அல்ல. நான் ஐயாயிரம் பேர் அழைத்துச் சென்றால் அவர்களுக்கு உணவளிக்க வேண்டும். அதனால், நான்தான் முந்நூறு பேர்போதும் என்று கூறி வைத்துள்ளேன், நீ அதை கிண்டல் செய்கிறாய்.


நான் உன்னைப் பற்றிய விஷயங்களை ஆதாரத்துடன் வைத்துள்ளேன். கனடாவில் ஒரு பெண் இருக்கு, அந்தக் கருமத்தையும் சொல்வேன். விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை எட்டு நிமிடம்தான் நீ சென்று சந்தித்துள்ளாய். நேற்று கூட ராஜ்கிரண் பேட்டியில் கூறினார். திரையுலகத்தில் உள்ள அனைவரும் சென்றோம். அதை வைத்துக்கொண்டு இவன் உலக அரசியல் பேசிக்கொண்டிருக்கிறான் என்றார்.

அந்த எட்டு நிமிட சந்திப்பில், நீ அவர்களின் சீருடையில் போட்டோ எடுக்க அனுமதி கேட்டுள்ளாய். அதற்கு இங்கு உள்ளவர்களைத் தவிர யாருக்கும் அனுமதி இல்லை என்று சொல்லிவிட்டார். நான் அங்கு சென்ற பொழுதே சீருடையில்தான் சென்றேன். என்னிடம் ஆதாரம் உள்ளது. பிரபாகரன் எனக்கு எழுதிய கடிதத்தில் ஆயிரம் முறை இறப்பேன் வைகோவின் தியாகத்திற்கு என்று அவர் கைப்பட எழுதியிருக்கிறார்.

நான் பேசக்கூடாது என்றுதான் இருந்தேன். ஆனால், நீ பெரியாரை திட்டினாய், அண்ணாவை முட்டாள் என்றாய். இதுபோல் பேசி கலவரத்தை உண்டாக்கி வசூல் செய்துகொண்டிருக்கிறாய். உலகம் முழுவதும் விடுதலைப் புலிகளுக்கு என்னை பிரதிநிதியாக நியமித்துள்ளார் என்று கூறி கோடிக் கணக்கில் வசூல் செய்துள்ளாய், எனக்கு தெரியும். நான் பிரஸ்சல்ஸ் மாநாட்டிற்கு சென்றிருந்தேன். அந்த மாநாட்டை நடத்துபவரிடம் என்னை ஏன் கூப்பிடவில்லை என்று நீ கேட்டாய். அதற்கு அவர் கூறியுள்ளார் வைகோ அண்ணன் ஆங்கிலத்தில் பேசுவார்

அவர் வந்தால் எங்களுக்கு பிரயோஜனம் என்பதற்காக  கூப்பிட்டோம் என்று. அதே பையன் என்னுடன் பிரான்ஸ் மாநாட்டில் காரில் செல்லும் பொழுது கூறினார், சீமான் மாநாடு நடத்த வேண்டும் மூன்றுகோடி தாருங்கள் என்று கேட்டதாக. முந்நூறு டாலர் கூட எங்களிடம் இல்லை, நாங்கள் எப்படி மூன்று கோடி தர முடியும் என்றேன் என்று அவர் என்னிடம் கூறினார்.


நான் எத்தனையோ நாடுகளுக்கு சென்றுள்ளேன். விடுதலைப் புலிகளிடமோ, ஈழத்தமிழர்களிடமோ ஒரு பைசா கூட  வாங்கியதில்லை.  விமான டிக்கெட் மற்றும் ஹோட்டல்  கட்டணம் கூட நான் கட்டிவிட்டு வருவேன். நீ மூன்று கோடி கேட்டுள்ளாய். இது போல் நூறு ஆதாரம் என்னிடம் உள்ளது.

உன் உணர்ச்சிமிக்க பேச்சில், இப்படி ஒரு வீரன் இருக்கிறானா என்று நினைத்துக் கொண்டு உன் பின்னால் வந்து இளம்பிள்ளைகள் நிற்கிறார்கள். அவர்கள் மீது தவறில்லை. அவர்கள் தமிழ் உணர்வுமிக்கவர்கள், ஈழவிடுதலை வேண்டும் என்று நினைப்பவர்கள். அவர்களை நான் திட்ட மாட்டேன். நீதான் இது போன்ற பித்தலாட்டங்களை செய்து கொண்டிருக்கிறாய்.

ஒரு முறை மலேசியாவில் ஈழ மாநாட்டிற்கு சென்றிருந்தேன். பினாங்கு துணை முதலமைச்சர் ராமசாமி மேடையில் பேசுகையில் சொன்னார், தமிழகத்தை சேர்ந்த ஒருவர் எனக்கு போன் செய்து, இந்த மாநாட்டிற்கு வைகோவை அழைக்காதீர்கள், அவர் தமிழர் அல்ல என்று சொன்னார். நான் சொன்னேன் வைகோ தமிழர் இல்லையேல், இந்த உலகத்தில் எவரும் தமிழர் அல்ல என்று பேசிவிட்டு அவர் என்னிடம் வந்து சொன்னார்,

வைகோ அண்ணா, அப்படி என்னிடம் கூறியவர் சீமான் என்று. எம்.ஜி.ஆர் மலையாளி என்றீர்கள்  எம்.ஜி.ஆர் போல் விடுதலைப் புலிகளுக்கு கோடி கோடியாக அள்ளிக் கொடுத்தவர் எவரும் இல்லை, நானே அவ்வாறு செய்யமுடியுமா என்று தெரியவில்லை. மருத்துவமனை, ஆயுதப்படைக்கு ஏற்பாடு செய்து கொடுத்தார். இன்னும் நூறு விஷயங்கள் என்னுள் அடங்கியுள்ளது. தேவைப்பட்டால் ஆதாரங்களுடன் வெளியிடுவேன்.

Top Seithigal

Comments