பிரதமர் மோடிக்கு யாரோ சூனியம் வைத்துவிட்டதாகவும், அந்த சூனியத்தை துர்தேவதைகளிடம் பேசி எடுத்தால்தான் அவர் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பார் என்றும் கூறிய விவசாயி ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டும் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசை எதிர்த்து தமிழகத்தில் அரசியல் கட்சிகள் முதல் மாணவர்கள் வரை தினந்தோறும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தால் தமிழகமே ஸ்தம்பித்து போய் உள்ளது.
இந்த நிலையில் அறந்தாங்கியை சேர்ந்த அறிஞர் என்ற விவசாயி தனிமனிதனாக அறந்தாங்கி - கீரமங்கலம் சாலையில் உண்ணாவிரதம் இருந்தார். இந்த உண்ணாவிரதத்தின் முடிவில், மோடிக்கு வைக்கப்பட்டுள்ள சூனியத்தை துர்தேவதைகளிடம் பேசி எடுக்கவுள்ளதாகவும், இதற்காக சுடுகாட்டில் சிறப்பு பூஜை செய்யவுள்ளதாகவும், அதன் பின்னர் மோடி, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்துவிடுவார் என்றும் பேசினார்
இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார், அந்த விவசாயியை கைது செய்து விசாரணை செய்து வருகின்றானர்.
Top Seithigal
Comments
Post a Comment