காவிரி பிரச்சனை எதிரொலி.. நெல்லையில் ரெய்னா பங்கேற்க இருந்த நிகழ்ச்சி ரத்து!

                               


                               ஐபிஎல் போட்டிக்கு எதிர்ப்பு நிலவி வரும் நிலையில் தற்போது திருநெல்வேலியில் சுரேஷ் ரெய்னா கலந்து கொள்ள இருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுக்க காவிரி வாரியம் அமைக்க கோரி போராட்டம் நடந்து வருகிறது. ஆனால் மத்திய அரசு தமிழக மக்களின் கோரிக்கையை இன்னும் காது கொடுத்து கேட்கவில்லை. இந்த நிலையில் காவிரிக்காக போராடும் மக்கள் ஐபிஎல் போட்டிக்கு தடை விதிக்க கோரிக்கை வைத்துள்ளனர்

                           ஐபிஎல் போட்டி சென்னையில் நடந்தால் காவிரி போராட்டம் பாதிக்கும் என்று கூறியுள்ளனர். சென்னையில் போட்டி நடந்தால் பெரிய அளவில் பிரச்சனை நடக்கும் என்றும் அவர்கள் குறிப்பிட்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் சென்னை வீரர்கள் கலந்து கொள்ளும் மற்ற சில நிகழ்ச்சிகளும் இதனால் பாதிக்கப்பட்டு வருகிறது.

                        அதன்படி தற்போது திருநெல்வேலியில் சுரேஷ் ரெய்னா கலந்து கொள்ள இருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்று வள்ளியூரில் உள்ள கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க இருந்தார் சென்னை வீரர் ரெய்னா. நெல்லை வடக்கன் குளத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் நடக்க இருந்த நிகழ்ச்சியில் அவர் இன்று பங்கேற்க இருந்தார். ஆனால் ஐபிஎல் எதிர்ப்பைத் தொடர்ந்து ரெய்னா நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.

Top Seithigal

Comments