முதல்வரைப் போல காவிரி பிரச்சனையில் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறார் ஸ்டாலின்: முத்தரசன்



                             முதல்வர் நாற்காலியில்தான் ஸ்டாலின் இல்லை. ஆனால் காவிரிக்கான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னின்று எடுக்கிறார் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்தார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தி தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.

                       திமுக செயல்தலைவர் ஸ்டாலினும் கூட்டணி கட்சியினருடன் காவிரி உரிமை மீட்பு பயணத்தை தொடங்கியுள்ளார். இதுகுறித்து இந்திய கம்யூ மாநில செயலாளர் முத்தரசன் கூறுகையில், காவிரி விவகாரத்தில் தமிழக அரசு தொடர்ந்து துரோகம் செய்து வருகிறது.

                   காவிரி உரிமை மீட்பு பயணத்தில் பெண்கள் மிகுந்த எழுச்சியுடன் பங்கேற்று வருகிறார்கள். முதல்வர் நாற்காலியில்தான் ஸ்டாலின் இல்லை, அனைத்து நடவடிக்கைகளையும் முன்னின்று எடுக்கிறார். காவிரி மேலாண்மை வாரியம் பெற்றுத்தர உங்களை நம்பி இருக்கிறோம் என்று ஸ்டாலினிடம் முத்தரசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஸ்டாலினுடன் முத்தரசனும் காவிரி உரிமை பயணத்தில் கலந்து கொண்டார்.

Top Seithigal

Comments