காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தவறிய மத்திய அரசை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் முழுபந்த் நடைபெற்று வருகிறது. திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் நடத்தி வரும் இந்த பந்த் காரணமாக தமிழகத்தில் இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.
திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி தொண்டர்கள் சாலை மறியல் மற்றும் ரயில் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டு கைதாகி வருகின்றனர்.
இந்த நிலையில் வேலூரில் இருந்து திருப்பத்தூர் செல்லும் நெடுஞ்சாலையில் திமுக பெண் தொண்டர் ஒருவர் திமுக கொடியை கையில் ஏந்தி சாலையில் வந்த ஒரு பேருந்து ஒன்றை யாருடைய துணையும் இன்றி தனி ஒருவராக நிறுத்தினார். தனி ஒருவராக பெண் ஒருவர் பேருந்தை நிறுத்தியதும், டிரைவர் உள்பட அனைவரையும் கீழே இறங்கி வர அந்த பெண் கூறியதும் அடங்கிய வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Top Seithigal

Comments
Post a Comment