பெண்களை நிர்வாணப்படுத்தி கொன்றது ஏன்: சைக்கோ கொலையாளி பரபர வாக்குமூலம்.

                 



                               திருமணம் செய்து கொள்ள யாரும் பெண் தராததால் மூதாட்டிகளை நிர்வாணப்படுத்தி கொலை செய்ததாக சைக்கோ கொலையாளி முனுசாமி வாக்குமூலம் அளித்துள்ளான். வேலூர் மாவட்டம், சோளிங்கர் அடுத்த தாளிக்கால் கிராமத்தில் தெய்வானை என்ற மூதாட்டி கடந்த மாதம் 16ம் தேதி கொலை செய்யப்பட்டார்.

                  இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து ராணிப்பேட்டை அடுத்த மாந்தாங்கலை சேர்ந்த சைக்கோ ஆசாமி முனுசாமியை கடந்த மாதம் 22ம் தேதி ஆந்திர போலீசார் கைது செய்து சித்தூர் சிறையில் அடைத்தனர்.

             இந்நிலையில், மூதாட்டி கொலை சம்பந்தமாக காவலில் எடுத்து முனுசாமியை விசாரிக்க சோளிங்கர் கோர்ட்டில், போலீசார் மனு அளித்தனர். அதை ஏற்று நேற்று ஒருநாள் மட்டும் அனுமதி அளித்தது.

            இதையடுத்து நேற்று காலை சித்தூர் சிறையில் இருந்த முனுசாமியை பலத்த பாதுகாப்புடன் சோளிங்கர் அழைத்து வந்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் முனுசாமி அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது: முனுசாமி 1990ல் தொடங்கி 2001 வரை பல்வேறு கொலை, கொள்ளை, திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதையடுத்து, குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டான். சிறையில் இருந்தபோது, 'தலையில் கல்லைப்போட்டு கொலை செய்தால் யாரும் கண்டுபிடிக்க முடியாது' என ஒருவர் கூறியுள்ளார்.

              அதன்படியே 2017ல் சிறையில் இருந்து வெளியில் வந்தவன் கல்லால் தாக்கி பெண்களை அதுவும் மூதாட்டிகளை கொலை செய்ய தொடங்கியுள்ளான். குற்றவாளி என்பதால், திருமணம் செய்ய இவனுக்கு பெண் கொடுக்கவில்லை.

                         இதனால் பெண்கள் மீது வெறுப்படைந்த முனுசாமி சைக்கோவாக மாறியுள்ளான். ஆனாலும், பெண்களிடம் உல்லாசம் அனுபவித்தால் எய்ட்ஸ் வருமோ என்ற அச்சம் காரணமாக, தனியாக இருக்கும் மூதாட்டிகளை நோட்டமிட்டு நிர்வாணப்படுத்தி தலையில் கல்லை போட்டு, அவர்களை கொலை செய்துள்ளான்.

                          திருட்டு, கொள்ளை சம்பவங்கள் தவிர இவன் 4 மூதாட்டிகள், இளம்பெண் ஒருவர், ஒரு குழந்தை என 6 பேரை கொலை செய்துள்ளான். இவனது கொலை முயற்சியில் 2 பேர் படுகாயங்களுடன் தப்பியுள்ளனர். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். விசாரணை முடிந்து சோளிங்கர் போலீசார் முனுசாமியை நேற்று பலத்த பாதுகாப்புடன் கோர்ட்டில் ஆஜர்படுத்தி பின்னர் சித்தூர் சிறையில் அடைத்தனர்.

Top Seithigal

Comments