சினிமா என்ன பாலியல் கேவலமான தொழிலா?: கொந்தளித்த காஜல் அகர்வால்.




                       சினிமா கேவலமான தொழில் என்று பேசப்படுவதை கேட்டு காஜல் அகர்வால் கோபம் அடைந்துள்ளார்.

தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ளார் காஜல் அகர்வால். தெலுங்கு திரையுலகின் சமத்து நடிகை என்ற பெயர் எடுத்துள்ளார். தற்போது அவர் குயின் பட ரீமேக்கில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் அவர் சினிமா பற்றி கூறியிருப்பதாவது,

சினிமா 

சினிமா துறைக்கு வந்தபோது இந்த அளவுக்கு பெரிய இடத்திற்கு வருவேன் என்று நினைக்கவில்லை. கடின உழைப்பாலும், ரசிகர்களின் ஆதரவாலும், கடவுளின் ஆசியாலும் இந்த இடத்திற்கு வந்துள்ளேன்.

பாதுகாப்பு 

படங்களில் நடிப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. நான் தைரியமானவள், எதற்கும் பயப்பட மாட்டேன். இருப்பினும் பொது இடங்களில் சில சமயம் நடிகைகளுக்கு தொல்லை கொடுக்கப்படுகிறது.

புகழ் 

நடிக்க வந்ததன் மூலம் எங்களுக்கு பெயரும், புகழும் கிடைக்கிறது. ஆனால் சுதந்திரம் போய்விடுகிறது. எங்களால் சுதந்திரமாக வெளியே செல்ல முடியவில்லை.


கெட்டது 

சினிமா கேவலமான தொழில் என்று சிலர் கூறுகிறார்கள். எந்த தொழிலும் நல்லதும் உண்டு கெட்டதும் உண்டு. எல்லாம் நம் பார்வையில் தான் உள்ளது என்று காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.

Top Seithigal

Comments