ஹைதராபாத் நகரில் பொது வெளியில் திடீரென்று அரை நிர்வாணப் போராட்டம் நடத்திய நடிகை ஸ்ரீ ரெட்டி இன்று கைது செய்யப்பட்டார். ஸ்ரீ ரெட்டி, அண்மைக் காலமாக தெலுங்கு திரைப்பட ஹீரோக்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் மீது பாலியல் அத்துமீறல் குற்றம்சாட்டி பேட்டி அளித்து வருகிறார்.
தெலுங்கு திரை உலகில் நடிகைகள் ஜாதி பிரச்சனை, பாலியல் தொல்லை ஆகியவற்றை சந்திக்க வேண்டிய நிலை உள்ளது. குறிப்பாக, நடிகைகளில் 90 சதவிகிதம் பேர் பல்வேறு தொல்லைகளை சந்திக்கின்றனர். நடிகைகளுக்கு தொல்லை கொடுப்பவர்களின் பெயர்களை வெளியிடுவேன் என்பதால் எனக்கு கொலை மிரட்டல் விடுக்கின்றனர்.
மேலும், மூவி ஆர்டிஸ்ட் அசோசியேசன் உறுப்பினருக்கான அடையாள அட்டையைக் கூட எனக்கு கொடுக்க மறுக்கின்றனர்' என்று ஸ்ரீ ரெட்டி குற்றம்சாட்டினார்.
இந்நிலையில், இன்று பிற்பகல் ஹைதராபாத்தில் உள்ள மூவி ஆர்டிஸ்ட் அசோசியேசன் அலுவலகத்திற்கு வந்த ஸ்ரீ ரெட்டி தனது மேலாடையைக் கழற்றி சாலையில் உட்கார்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். இது குறித்த தகவலின் கிடைத்ததும், அங்கு விரைந்து வந்த ஜூப்ளி ஹில்ஸ் போலீசார் ஸ்ரீ ரெட்டியைக் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
Top Seithigal
Comments
Post a Comment