இடுப்பை பிடித்து கிள்ளியது யார்? - திமுக போராட்டத்தில் சலசலப்பு



                            காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து நேற்று தமிழகமெங்கும் போராட்டங்கள் வெடித்தது. குறிப்பாக சென்னையில் சாலை மற்றும் ரயில் மறியல் போரட்டங்கள் நடைபெற்றது.

                      அந்நிலையில், இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக கரூர் மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் ஜெயமணி என்பவர் சென்னை வந்திருந்தார். சென்னையில் நடந்த மறியல் போரட்டத்தில் அவர் கலந்து கொண்டார்.

                         அப்போது பிரபாகரன் என்ற நிர்வாகி தனது இடுப்பை கிள்ளிவிட்டதாக அவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த விவகாரம் திமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக நகர செயலாளரிடம் புகார் கூறியும் அவர் கண்டுகொள்ளவில்லை. எனவே, செயல் தலைவர் ஸ்டாலினின் கவனத்திற்கு இதை கொண்டு செல்வேன் என ஜெயமணி கூறினார். இதுபற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் கூறிய பின்பு ஜெயமணி சமாதானம் அடைந்தார்.

                            இந்த விவகாரத்தை சமூக வலைத்தளங்களில் பலரும் கிண்டலடித்து வருகின்றனர்.

Top Seithigal

Comments