தமிழகத்தில் ஐ.பிஎல் போட்டிக்கு எதிராக விளம்பரங்களை இளைஞர்கள் அழித்து வருகின்றனர்.
11 ஆவது ஐ.பி.எல் போட்டி நாளை மும்பையில் ஆரம்பமாகவுள்ளது. இப் போட்டி நாளை முதல் மே மாதம் 27 ஆம் திகதி வரை இந்தியாவின் பல மாநிலங்களில் நடைபெறவுள்ளது. மேலும் நாளை ஆரம்பமாகும் முதலாவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதவுள்ளன.
இந்நிலையில் தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல், ஸ்டெர்லைட் எதிர்ப்பு மற்றும் நியூட்ரினோ எதிர்ப்பு ஆகிய போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது. இதனால் தமிழகத்தில் ஐ.பி.எல் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஐ.பி.எல் போட்டிக்கு வரையப்பட்ட விளம்பரங்களை அழித்து, அதற்கு பதிலாக காவிரி வேண்டும், விவசாயி என எழுதியுள்ளனர்.
Top Seithigal
Comments
Post a Comment