பா.ம.க பந்த் எதிரொலி எல்லையில் கர்நாடக பஸ்கள் நிறுத்தம்.



                            காவிரி மேலாண்மை விவகாரத்தில் தமிழகத்தில் பல கட்ட போராட்டங்கள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் பா.ம.க அழைப்பு விடுத்துள்ள மாபெரும் பந்த் ஆனது தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனால் தமிழக கர்நாடக எல்லையில் கர்நாடக பதிவெண் கொண்ட பஸ்கள் சோதனை சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டன.

சத்தியமங்கலம் வழியாக கோவை, ஈரோடு செல்லும் கர்நாடகா பஸ்கள் திம்பம் சோதனை சாவடியில் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாதுகாப்பு கருதியே நிறுத்தப்பட்டதாகவும் புளிஞ்சூர் சோதனை சாவடி வழியாக செல்லுமாறு பஸ்கள் திருப்பி விடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

Top Seithigal

Comments