வெறும் ரூ.248/-க்கு 3ஜிபி/நாள் + நம்பமுடியாத வேலிடிட்டி: பிஎஸ்என்எல் அதிரடி.!


                                     

                           தற்போது, ரிலையன்ஸ் ஜியோ மற்றும் அதன் ரூ.251/- ப்ரீபெய்ட் என்கிற கிரிக்கெட் சீசன் திட்டத்தை எதிர்த்து, அரசு நடத்தும் தொலைத் தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் அதன் ரூ.248/- ப்ரீபெய்ட் எஸ்டிவி திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டமானது ஜியோவி ரூ.251/- கொண்டிருக்கும் அதே செல்லுப்படி காலத்தை கொண்டிருந்தாலும் கூட, ஜியோவை விட அதிகமான டேட்டா நன்மையை வழங்குகிறது.

ஒரு நாளைக்கு 3 ஜிபி.! 

புதிதாய் அறிவிக்கப்பட்டுள்ள பிஎஸ்என்எல்-ன் ரூ.248/- ஆனது மொத்தம் 157 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது. இதன் செல்லுபடியாகும் காலம் 51 நாட்கள் ஆகும், அதாவது இந்த திட்டத்தின் கீழ், ஒரு நாளைக்கு 3 ஜிபி அளவிலான டேட்டா கிடைக்கும் என்று அர்த்தம்.

ஏப்ரல் 30, 2018 வரை மட்டுமே.! 

ஏப்ரல் 7 (இன்று முதல்) தொடங்கி மே 27 வரை நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகள் மொத்தம் 51 நாட்கள் நடக்கிறது. அதனை மனதிற்கொண்டு வெளியாகியுள்ள்ள இந்த பிஎஸ்என்எல் ரூ.248/- ஆனது ஏப்ரல் 7-ஆம் தேதி முதல் ஏப்ரல் 30, 2018 வரை மட்டுமே ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

டேட்டா நன்மையை மட்டுமே.!

மேலும் இந்த புதிய ரூ.248 ப்ரீபெய்ட் திட்டத்தின் கீழ், எந்த விதமான குரல் அழைப்பு நன்மையையும் குறிப்பிடப்படவில்லை. எனவே புதிய திட்டம் டேட்டா நன்மையை மட்டுமே வழங்குமொரு திட்டமாக இருக்கலாம்.

ஜியோ ரூ.251/- நன்மைகள்.! 

ஜியோவின் ரூ.251-அந்த நன்மைகளை பொறுத்தவரை, மொத்தம் 51 நாட்கள் செல்லுபடியாகும் இந்த திட்டம், மொத்தம் 102 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டத்தின் செல்லுபடி காலம் 51 நாட்கள் என்பது மட்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆக மொத்தம் நாள் ஒன்றிற்கு 2ஜிபி அளவிலான டேட்டா கிடைக்கும் என்று யூகிக்க முடிகிறது. எனினும் இந்த திட்டத்தின் தினசரி வரம்பு பற்றிய விவரங்களை ஜியோ வெளிப்படுத்தவில்லை.

பரிசுகளை வழங்கும் ஜியோ கிரிக்கெட் ப்ளே அலாங்.! 

இந்த கிரிக்கெட் சீசன் பேக் உடன், மேலும் இரண்டு புதிய முயற்சிகளையும் ஜியோ அறிவித்துள்ளது. ஒன்று பங்கேற்பாளர்களுக்கு பரிசுகளை வழங்கும் 'ஜியோ கிரிக்கெட் ப்ளே அலாங்' என்கிற மொபைல் கேம் முயற்சி, மற்றொன்று 'ஜியோ தன் தாணா தன் லைவ்' என்கிற நகைச்சுவை நிகழ்ச்சி.

Top Seithigal

Comments