காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி ஏப்ரல் 11-ஆம் தேதி பாமக பந்த் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. இதற்கு ஆதரவு அளிப்பதாக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் அதை மத்திய அரசு நிறைவேற்றவில்லை. இதனால் தமிழகம் வஞ்சிக்கப்படுவதாக கூறி தமிழக அரசியல் கட்சிகள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன.
அதேபோல் ஆளும் கட்சியான அதிமுகவும் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை கடந்த 3-ஆம் தேதி நடத்தியது. இந்நிலையில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஏப்ரல் 5-ஆம் தேதி பந்த் போராட்டத்தை நடத்தினர்.
காவிரி உரிமை மீட்பு
இந்த போராட்டத்துக்கு பாமக முழு ஆதரவை அளித்தது. இதைத் தொடர்ந்து திருச்சி முக்கொம்பிலிருந்து ஸ்டாலின் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் காவிரி உரிமை மீட்பு பயணத்தை நேற்று தொடங்கினர்.
இன்று போராட்டம் இன்று 2-ஆவது நாளாக தஞ்சை சூரக்கோட்டையிலிருந்து போராட்டம் தொடங்கியது. இதேபோல் ஸ்டெர்லைட் போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும் திரையுலகினர் இன்று போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஸ்டாலினிடம் கோரிக்கை
இந்நிலையில் காவிரிக்காக வரும் ஏப்ரல் 11-இல் பாமக முழு கடையடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. இதற்கு ஆதரவு தருமாறு பாமக நிறுவனர் ராமதாஸ், திமுக செயல்தலைவர் ஸ்டாலினிடம் கோரினார்.
11-இல் பந்த்
ராமதாஸ் கோரியதை தொடர்ந்து பாமகவின் முழு அடைப்பு போராட்டத்துக்கு திமுக ஆதரவு தெரிவிப்பதாக ஸ்டாலின் அறிவித்துள்ளார். எனவே வரும் 11-ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படவுள்ளது.
Top Seithigal
Comments
Post a Comment