அஜித்தின் விசுவாசம் படத்தின் நியூ அப்டேட்; குஷியான ரசிகர்கள்



                                    நடிகர் அஜித் மற்றும் இயக்குநர் சிவா கூட்டணியில் மீண்டும் இணையும் புதிய படம் 'விசுவாசம்'. வீரம், வேதாளம், விவேகம் படத்தை தொடர்ந்து அஜித்தின் அடுத்த படத்தையும் இயக்குநர்ர் சிவாவே இயக்குகிறார். இப்படத்தையும், சத்யஜோதி பிலிம் நிறுவனமே தயாரிக்கிறது.

இயக்குநர் சிவா படத்தின் தலைப்பை அறிவித்ததோடு படத்தை பற்றிய எந்த அப்டேட்டும் கொடுக்கவில்லை. இதனால் ரசிகர்கல் இயக்குநர் சிவாவிடம் படத்தைப் பற்றி சமூக வலைதளங்களில் கேள்வி கேட்டு வந்தனர் ரசிகர்கள். இந்நிலையில் விசுவாசம் பற்றிய அப்டேட் மட்டும் அல்ல அஜீத் பற்றியும் ஒரு அப்டேட்  கிடைத்துள்ளது.

விசுவாசம் படத்தின் ஷூட்டிங் பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி துவங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜூலை மாதத்திற்குள் படப்பிடிப்பை நடத்தி முடிக்க சிவா திட்டமிட்டுள்ளாதாகவும் கூறப்படுகிறது. வரும் தீபாவளி பண்டிகைக்கு விசுவாசத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளாராம் இயக்குநர் சிவா.

அஜித் இனிமேல் ஆண்டுக்கு ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்று அஜீத் முடிவு செய்துள்ளாராம். இந்த தகவல் தல ரசிகர்களுக்கு நிச்சயம் கொண்டாட்டமாக  அமையும். மேலும் தீபாவளிக்கு விஜய் மற்றும் சூர்யா படங்களையும் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Top Seithigal

Comments